Pages

Showing posts with label whatsapp tamil. Show all posts
Showing posts with label whatsapp tamil. Show all posts

வாட்ஸ் அப்

அவ்வளவு ஆபத்தானதா வாட்ஸ்-அப்?

Share




வாட்ஸ்-அப் என்க்ரிப்ஷன் அப்டேட் ஆகத் தொடங்கிய நாளிலிருந்தே அது இந்திய சட்ட திட்டங்களுக்கு எதிரானது. எனவே வாட்ஸ்-அப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் பரவின. அதுவா எப்ப நடக்க? இப்பவே தடை பண்ணுங்க என நீதிமன்ற படி ஏறியிருக்கிறார் ஒரு சமூக ஆர்வலர். வாட்ஸ்-அப் என்க்ரிப்ஷன் மிகவும் ஆபத்தானது என்பது அவரின் வாதம். அப்படி என்னதான் இருக்கிறது அந்த என்க்ரிப்ஷனில்?

எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் கீழ் நீங்கள் மெசேஜ், படம், வீடியோ, டாக்குமென்ட் என எந்த எலக்ட்ரானிக் மெசேஜ் அனுப்பினாலும் அதை மற்ற யாராலும் படிக்க முடியாது. மறுமுனையில் இருப்பவர் மட்டுமே படிக்க முடியும். உண்மையில் இந்த என்க்ரிப்ஷனை 2014-லிலேயே தொடங்கிவிட்டது வாட்ஸ்-அப். அப்போது மெசேஜ்க்கு மட்டும் இருந்த என்க்ரிப்ஷன் இப்போது எல்லாவற்றுக்கும் பரவியிருக்கிறது.

இந்த என்க்ரிப்ஷனுக்காக சிக்னல் புரோட்டாகாலை பயன்படுத்துகிறது வாட்ஸ்-அப். இதன் மூலம் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜும் ஒரு ரகசிய மெசேஜ் கீ தாங்கிச் செல்லும். ஒவ்வொரு மெசேஜுக்கும் ஒவ்வொரு கீ என்பதால் இவற்றை உடைப்பது மிகவும் சிரமம். அப்படியே செய்தாலும் அந்த கீ-க்கான துண்டு செய்தி மட்டும்தான் கிடைக்கும். முழு உரையாடலும் கிடைக்காது. இப்படி கீ தாங்கிச் செல்வதால் முன்பை விட மெசேஜ் கொஞ்சம் மெதுவாகவே சென்று டெலிவர் ஆகும்.

இதை நீங்கள் செக் செய்தும் பார்க்கலாம். மறுமுனையில் இருப்பவரின் பெயரை க்ளிக் செய்தால் ஒரு 60 இலக்க எண்ணும், QR கோடும் காட்டும். அதனை நம் மொபைலில் இருந்து ஸ்கேன் செய்தால் க்ரீன் டிக் தோன்றி என்க்ரிப்ட் ஆனதை உறுதிப்படுத்தும்.

இந்த என்க்ப்ரிஷன் திரும்பி வர முடியாத ஒரு வழிப்பாதை. இதற்குள் நீங்கள் நுழைந்து விட்டால் திரும்ப பழைய செட்டிங்கிற்கு வரமுடியாது. அதே சமயம் கோடிக்கணக்கான பேர் இதை பயன்படுத்தினால் அனைத்தும் சிதம்பர ரகசியமாகிவிடும்.

இந்தியாவில் என்ன சிக்கல்?

டெலிகாம் நிறுவனங்களும், இன்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடர்களும் லைசென்ஸிற்கு விண்ணப்பிக்கும்போதே சில விதிமுறைகளை ஒப்புக் கொள்கின்றன. அதில் 40 பிட் என்க்ரிப்ஷனும் ஒன்று. (ஒரு பிட் என்பது ஒரு கீ). அதைத் தாண்டி அந்த நிறுவனங்களால் என்க்ரிப்ட் செய்யவே முடியாது. ஆனால் வாட்ஸ்-அப் தற்போது பயன்படுத்துவது 256 பிட் என்க்ரிப்ஷன். பின் எப்படி இந்தியாவில் செயல்பட முடிகிறது? அங்குதான் சமாச்சாரமே.

வாட்ஸ்-அப், ஸ்கைப் போன்ற நிறுவனங்கள் இந்த வரையறைக்குள் வராது. காரணம் அவை OTT( Over The Top) என்ற பிரிவின் கீழ் வரும் நிறுவனங்கள். இவற்றுக்கு இந்தியாவில் எந்தவிதமான விதிமுறையும் இன்னும் வகுக்கப்படவில்லை. 2015-ல் இதுகுறித்த கலந்தாய்வு நடந்து விதிமுறைகளும் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் அவை நடைமுறைக்கு வராததால் இன்னும் இந்த என்க்ரிப்ஷன் சட்டத்துக்கு மீறியதாக அறிவிக்கப்படவில்லை.

மற்ற நாடுகளில்...

மற்ற நாடுகள் இந்தப் பிரச்னைகளை வேறு மாதிரி டீல் செய்கின்றன. உதாரணமாக பிரான்ஸில் ஸ்கைப் டெலிகாம் நிறுவனங்களின் கீழ் வருகிறது. சீனாவில் இந்த நிறுவனங்களுக்காக தனியே ஒரு ஆணையமே அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இதுகுறித்த குறைந்தபட்ச செயல்திட்டம் கூட இல்லாத நிலையில்தான் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

தொழில்நுட்பங்களின் வெற்றி, தோல்விகள் அவற்றை பயன்படுத்துபவர்களில் கையில்தான் இருக்கிறது. அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தின் பிடிவாதம் முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் பல கோடிகளை செலவழித்து வருகிறது எஃப்.பி.ஐ. அந்த நிலை இங்கும் வரக்கூடும். அதற்குள் அரசும், மக்களும் விழித்துக் கொள்ளுதல் நலம்.


abnazinfotech kumbakonam

Advertisement slider