Basic Electrical மின்னியல் தமிழில்

Basic Electrical in மின்னியல் தமிழில்...!
மின்சாரம் இன்னைக்கு ஒரு முக்கியமான ஒன்றாகிவிட்டது வாழிக்கையில, அது இல்லாம அன்றாட வாழ்க்கைய ஓட்றது கொஞ்சம் கஸ்டம் தான். ஆனா என்ன ஒரு சின்னதா ப்யூஸ் போனாக் கூட , அத மாத்த யோசிக்கிற மக்கள் நிறையப் பேரு இருக்காங்க, காரணம் அதை பற்றிய பயம், சரியான புரிதல் இல்லாமைனு சொல்லலாம். பயப்படும் படியானா, இல்ல தொட்ட உடனே ஆளைக் காலி [பண்ணிடும் பயங்கரமான ஒன்னு இல்ல அது,

எலக்ட்ரிசிட்டினா என்ன? அதை எப்படிக் கையாளனும்னு தெரிஞ்சுகிட்டா சின்ன சின்ன வேலைகளுக்கேல்லாம் எலக்ட்ரீசியனத் தேடி ஓட வேண்டியதில்லை, அதே போல தெரியமல் ஏற்படும் மின் விபத்துகளையும் தவிர்க்கலாம்.

எலக்ரிசிட்டினா (electricity) என்ன?

ரொம்ப எலக்ட்ரான், புரொட்டான் அப்படினு எல்லாம் குழப்ப போறதில்ல இப்போ, அத பத்தி அப்புறமா பார்ப்போம், ஒரு எலக்ட்ரிக்கல் சிஸ்டதுல பல பகுதிகள் இருக்கு, ஹைட்ரோ சிஸ்டம் எடுத்துகிட்டா பெரிய டேம் ல ஆடம்பிச்சு, ஜெனரேட்டர், டிரான்ஸ்பார்மர், சப்ஸ்டேசன், டிரான்ஸ்மிசன் லைன்னு பெரிய பார்ட்ஸ்ல இருந்து உங்க வீட்டு சுட்சு வரைக்கும் லாஜிலா இனைக்கபட்ட ஒரு அமைப்பு அது.

இந்த எலக்ட்ரிக்கல் ரிப்பேர் அப்படிஙகறதுல ஹவுஸ் வயரிங்க் பத்தி கொஞ்சம் விரிவாவும் , அதுக்கு கடைக்பிடிக்க வேண்டிய விதிகள் நடைமுறைகள் பத்தி கொஞ்சம் விரிவா பின்னர் பார்கலாம்....

இன்னிக்கு டிப்ஸ்:-

ப்யுஸ்(fuse) போயிடுச்சுனா மாத்தும் போது:-

இப்போ பெரும்பாலும் சர்க்யுட் பிரேக்கர் தான் உபயோகிக்றாங்க எல்லோரும். அதுல இருக்கும் சுவிட்ச திரும்ப மேல தள்ளிவிட்டாப் போதும். கீழ இருக்கும் படத்த பாருங்க.


இதில்லாமா பழைய டைப் ப்யூசா இருந்தா கொஞ்சம் கவனமா இருக்கனும்.


ப்யூஸ் மாற்றும் போது

ஈரமான தரையில் நிக்க கூடாது

காலில் ரப்பர் செருப்பு அணிந்து கொண்டு மாற்றுவது நல்லது.

எப்படி மாத்தனும்ன்னு அடுத்த போஸ்ட்ல பார்க்கலாம்----- தொடரும்.




abnazinfotech kumbakonam

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads